Published : 18 Sep 2015 08:18 AM
Last Updated : 18 Sep 2015 08:18 AM

நிறுவன வளர்ச்சிக்காக நரபலி கொடுக்கப்பட்டதாக புகார்: பி.ஆர்.பழனிச்சாமியிடம் 10 மணி நேரம் விசாரணை

நிறுவன வளர்ச்சிக்காக மனநலம் பாதிப்படைந்தவர்களை நரபலி கொடுத்ததாக தரப்பட்ட புகார் தொடர்பாக பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் போலீஸார் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

பிஆர்பி கிரானைட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக் கப்பட்டவர்கள் நரபலி கொடுக் கப்பட்டு, சின்னமலம்பட்டி மயானத்தில் புதைக்கப்பட்டதாக பிஆர்பி நிறுவன முன்னாள் ஓட்டுநர் சேவற்கொடியோன் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சேவற்கொடியோன் அடையா ளம் காட்டிய இடம் செப். 13-ல் சட்ட ஆணையர் சகாயம் முன்னிலை யில் தோண்டப்பட்டது. அந்த இடத் தில் அடுத்தடுத்து புதைக்கப்பட்டி ருந்த ஒரு குழந்தை சடலம் மற் றும் 3 பெரியவர்களின் சடலத் தின் எலும்புகள் மீட்கப்பட்டன. எலும் புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நரபலி புகார் தொடர்பாக பிஆர்பி நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி, மேலாளர் அய்யப்பன், ஊழியர் ஜோதிபாசு, ஓட்டுநர் பரமசிவம் ஆகியோர் மீது கீழவளவு போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரிக்க தனிப் படையை அமைத்து மதுரை எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பினர். இவர்களில் அய்யப் பன், ஜோதிபாசு, பரமசிவம் ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராயினர். அவர்களிடம் கடந்த 2 நாட்களாக தனிப்படை போலீஸார் விசாரித்தனர். உடல் நிலையைக் காரணம் காட்டி பி.ஆர்.பழனிச்சாமி கடந்த 2 நாட்களாக ஆஜராகாமல் இருந்தார்.

3-வது நாளான நேற்று பி.ஆர்.பழனிச்சாமி கீழவளவு காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி. மாரியப்பன், டி.எஸ்.பி. மங்களேஸ்வரன், ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படையினர் விசா ரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது.

விசாரணையை முன்னிட்டு காவல் நிலையம் முன் பிரதான சாலையில் இரும்பு பேரிகாட் தடுப்புகள் அமைக்கப்பட்டன. காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்கள், செய்தியாளர்களை போலீஸார் அனுமதிக்க வில்லை.

இறந்தவர்கள் விவரம் சேகரிப்பு

நரபலி புகாரைத் தொடர்ந்து சின்னமலம்பட்டி மயானம் தோண்டப்பட்டு அடுத்தடுத்து புதைக்கப்பட்ட 4 சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நரபலி சம்பவம் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக பிஆர்பி நிறுவன முன்னாள் ஓட்டுநர் சேவற்கொடியோன் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களையும், அவர்களில் சின்னமலம்பட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இறந்தோர் குறித்து வீடு வீடாக சென்று போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x