

கைகளில் சானிடைசர் தட விக்கொண்டு அடுப்பை பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டு கிராமப் பெண் உதவியாளர் ஒரு வர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச் சுழி நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் சோலைராஜ் (38). பனைகுடி டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோலையம்மாள் (36). காத்தான்பட்டி கிராம உதவி யாளராகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு குரு பிரசன்னா (12) என்ற மகனும், சோலை (9) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 28-ம் தேதி வீட்டிலிருந்த சோலைராஜ் மனைவியிடம் டீ கேட்டுள்ளார். அப்போது, கைகள் மற்றும் கால்களில் சானிடைசர் தடவியிருந்த சோலையம்மாள், டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சோலை யம்மாள் மீது தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. அவர் மீது தண்ணீரை ஊற்றி சோலைராஜ் தீயை அணைத்தார்.
பலத்த தீக்காயம் அடைந்த சோலையம்மாள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.
பின்னர் தீவிரச் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோலையம்மாள் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.