

வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதுரையை அடைந்தது. இதனால் மாவட் டத்தின் பல பகுதிகளில் விவசாயப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணை யில் இருந்து, கடந்த திங்கட்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. பெரி யாறு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கும், அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்து என மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டத்தில் 45,041 ஏக்கர் பாசன வசதி பெறும். வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை கள்ளந்திரி பிரதான கால்வாயை வந்தடைந்தது. அப்பகுதி விவசாயிகள் மலர் தூவி தண்ணீரை வரவேற் றனர். இதைத்தொடர்ந்து கிளைக் கால்வாய்களில் தண்ணீர் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து வயல்களில் நீரைப் பாய்ச்சி நிலத்தை தயார் படுத்துவதிலும், நெல் நாற்று பாவுவதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 30 நாட்கள் வரை இப்பணிகள் நடக்கும். பின்னர் நாற்று நடப்படும். தற்போதைய நிலையில், கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டுசெல்ல முடியாத நிலை இருந்தாலும், பலத்த மழை தொடரும்போது, தானாகவே கண்மாய்க்கு தண்ணீர் சென்றுவிடும். அணையின் நீர் மட்டம் உயரும் நிலையில், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.