அர்ச்சகர் பணிக்கு ரூ.1.4 லட்சம் லஞ்சம்: வழக்கறுத்தீஸ்வரர் கோயில் செயல் அலுவலரிடம் விசாரணை

சரவணன்
சரவணன்
Updated on
1 min read

கோயில் அர்ச்சகர் பணிக்காக ரூ.1.4 லட்சம் லஞ்சம் கேட்ட கோயில் செயல் அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களின் செயல் அலுவலராக இருப்பவர் சரவணன்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு வழக்கறுத்தீஸ்வர் கோயில் குருக்கள் நாகராஜன் உடல் நலக்குறைவால் இறந்தார். அந்தக் கோயில் அர்ச்சகர் பணிக்கு கருணை அடிப்படையில் தன்னை பரிந்துரை செய்யும்படி நாகராஜன் மகன் ஹரி, கோயில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்தால் அர்ச்சகர் பணிக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ஹரி தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் வேதிப்பொருள் தடவிய ரூ.40 ஆயிரத்தை ஹரி கையில் கொடுத்து அதை சரவணனிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். இதை ஹரி காஞ்சிபுரம் ஆதி காமாட்சி கோயிலிலுக்கு சென்று அங்கிருந்த செயல் அலுவலர் சரவணனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சரவணனை பிடித்தனர். இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in