Published : 02 Sep 2020 07:39 PM
Last Updated : 02 Sep 2020 07:39 PM

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு: விண்ணப்பிக்க இறுதித் தேதி நீட்டிப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.N.Y.S) மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசு யோகா B.N.Y.S இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கு பி.என்.ஒய்.எஸ். (B.N.Y.S) மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து, இணையவழி மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 03.08.2020 அன்று முதல் வரவேற்கப்பட்டன.

விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை எங்களது அலுவலக வலைதளமான “www. tnhealth.tn.gov.in’’ லிருந்து பதிவிறக்கம் செய்ய மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாட்கள் முறையே 28-08-2020 மற்றும் 31-08-2020-லிருந்து 12.09.2020 முடிய மாலை 5 மணி மற்றும் 15.09.2020 முடிய மாலை 5.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரமான வலைதள அறிவிக்கை, மேற்கண்ட பி.என்.ஒய்.எஸ். படிப்பிற்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு, விருப்பப் படிவத்துடன் கூடிய பொது மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு முறைகள், படிப்புகளின் விவரம், சிறப்பு பிரிவினர், அடிப்படைத் தகுதி, கல்விக் கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு “www. tnhealth.tn.gov.in’’ என்ற வலைதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

1. விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினைப் பதிவிறக்கம் செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள்: 12.09.2020 முடிய மாலை 5 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2. பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் தபால்/ கூரியர் சேவை வாயிலாக பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செய்யப்பட்ட கடைசி நாள் 15.09.2020 முடிய மாலை 5.30 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x