

கிரானைட் முறைகேடுகள் விசார ணைக்கு ஆளுங்கட்சி இடையூறாக உள்ளதால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிக சார்பில் நடந்த விழாவில் பங்கேற்க விஜயகாந்த் நேற்று முன்தினம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயம் விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரானைட் முறைகேடுகளை அவர் விசாரிக்க தொடங்கியதில் இருந்தே அவருக்கு பல இடை யூறு ஏற்பட்டு வருகிறது. ஆளுங் கட்சியினர் விசாரணைக்கு இடை யூறாக உள்ளனர். எனவே, கிரா னைட் முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
இலவசப் பொருட்கள் வழங்கு வது தவறல்ல. வறுமையை ஒழிக்க மக்களுக்கு அரசு உதவ வேண்டும். நான் எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து ஏழைகளுக்கு உதவி வருகிறேன். அதே போன்றதுதான் அரசு இல வசப் பொருட்கள் வழங்குவதும். ஆனால், அதை உரிய பயனாளிகளுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி இருக்குமா, இல்லையா என்பது குறித்து அப் போது தெரிவிப்பேன். 2016-ல் தேமுதிக வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.