கிருஷ்ணகிரியில் 3-வது நாளாக தொடர் மழை: நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எண்ணேகொல் புதூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர். 			    	                 படம்: எஸ்.கே.ரமேஷ்
கிருஷ்ணகிரி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எண்ணேகொல் புதூர் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர். படம்: எஸ்.கே.ரமேஷ்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக மழை பெய்ததால், நிலக்கடலை விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் நிலக்கடலை பயிர்கள் கருகி வந்தன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி, தளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று பிற்பகலில் கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழையால் குளம், குட்டைகளில் மழைநீர் நிரம்பி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சூளகிரி - 23, கிருஷ்ணகிரி - 16, அஞ்செட்டி - 15.5, ஓசூர் - 15, போச்சம்பள்ளி - 13, பெனுகொண்டாபுரம் - 10.4, தேன்கனிக்கோட்டை - 10, பாரூர் - 8.6, நெடுங்கல் - 8.2 மிமீ.

கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 248 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள், ஆறு ஆகியவற்றில் விநாடிக்கு 92 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 28.05 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் கனமழை

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக, ஒகேனக்கல் பகுதியில் 64 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதுதவிர, பென்னாகரத்தில் 62 மி.மீ, பாலக்கோட்டில் 51 மி.மீ, அரூரில் 10.2 மி.மீ, மாரண்டஅள்ளி மற்றும் தருமபுரியில் 8 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 6.2 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலை களில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in