

ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க கொடைக்கானல் தயாராகி வருகிறது. படகு சவாரி, பிரையண்ட் பூங்கா பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை. இயற்கையை ரசித்துச் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது.
கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன் னரே திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டு முற்றிலும் முடக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக இல்லை. மேலும் இந்த நிலை தொடர்ந்து 5 மாதங்கள் நீடித் ததால், கொடைக்கானல் மக்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யானது.
இந்நிலையில், தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ளது. விடுதிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாதங்களாகத் திறக்கப்படாத விடுதிகளைச் சுற்றுலாப் பயணி களுக்காக தயார் செய்யும் பணியை விடுதி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.
சுற்றுலாத் தலங்களில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகளும், தங்கள் கடைகளை நாளை முதல் திறக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளை வரவேற்க கொடைக்கானல் தயாராகி வரு கிறது.
இந்நிலையில், வெளி மாவட்டங் களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து அனுமதி கிடைத்தவுடன்தான் கொடைக்கானல் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருக்கும் என்ற கவலையும் சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் கட்டுப்பாடு களுடன் சுற்றுலாவுக்கு அனுமதி என்ற அரசின் அறிவிப்பு, கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு சிறிது ஆறுதலான விஷயமாக உள்ளது.
இன்று முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் செல்லும் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், படகு சவாரி ஆகியவற்றுக்குச் செல்ல முடியாது. இவைகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதுபோன்று வனத்துறை பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் தடை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு அரசின் உத்தரவு வராததால் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் உள்ளனர். கொடைக்கானலில் தற்போது இதமான தட்பவெப்ப நிலை நிலவுவதால் (வெப்பநிலை அதிகபட்சம் 18 டிகிரி செல்சி யஸ், குறைந்தபட்சம் 14 டிகிரி செல்சியஸ்) அங்கு செல் லும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையை முழுமையாக ரசித்துவிட்டு வரலாம். மேலும் பூம்பாறை கோயில், குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.