திருநின்றவூரில் மகன் இறந்தது தெரியாமல் 3 நாட்களாக சடலத்துடன் இருந்த மனநிலை பாதித்த தாய்

திருநின்றவூரில் மகன் இறந்தது தெரியாமல் 3 நாட்களாக சடலத்துடன் இருந்த மனநிலை பாதித்த தாய்
Updated on
1 min read

திருநின்றவூர், சி.டி.எச். சாலைபகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி(35). மனநிலை பாதிக்கப்பட்ட இவர், கணவரைப் பிரிந்து கடந்த7 ஆண்டுகளாக மகன் சாமுவேலுடன்(7) தனியாக வசித்து வந்தார். சாமுவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை சரஸ்வதி, காவல் துறையின் அவசரஉதவி எண்ணை தொடர்பு கொண்டு, தன் மகனின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார். திருநின்றவூர் போலீஸார் உடனே அங்கு சென்று பார்த்தபோது, சாமுவேல் இறந்து 3நாட்கள் ஆனதும், மகன் இறந்ததுகூட தெரியாமல் சரஸ்வதி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து,போலீஸார் இறந்த சாமுவேலுவின்உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மனநிலை பாதிப்பால் மகன் இறந்தது தெரியாமல் இருந்துள்ளார். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் சிறுவன் சாமுவேல் எதனால் இறந்தார் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in