Published : 01 Sep 2020 07:03 AM
Last Updated : 01 Sep 2020 07:03 AM

மாவட்டங்களுக்குள் இயக்கவே அனுமதி: தொலைதூர பேருந்துகள் இயங்காது

சென்னை

கரோனா ஊரடங்கில் தமிழக அரசின் புதிய தளர்வுப்படி, இன்று(செப்.1) முதல் மாவட்டத்துக்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து சேவை வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளை இயக்க அனுமதி இல்லை.

அதன்படி, விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் இயக்க வேண்டிய 1,174 பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் அடிப்படையில்

இதுதொடர்பாக அரசு விரைவுபோக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். தொலைதூரம் செல்லும் விரைவு பேருந்துகள் இயக்கப்படாது. இருப்பினும் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்தம் அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் தேவைப்படுவோர் 9445014402, 9445014416, 9445014424, 9445014463 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால், சென்னைக்கு வர கார்கள், வேன்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது, தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லை என்பதால், தென்மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலாவது அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x