டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.243 கோடி மதுபானங்கள் விற்பனை

டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.243 கோடி மதுபானங்கள் விற்பனை
Updated on
1 min read

டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.243 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளில் வார நாட்களில் சராசரியாக ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் விற்பனை இரு மடங்கு நடைபெறுவது வழக்கம்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோரின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் கடந்த சனிக்கிழமையும் மது வாங்க வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் ரூ.243 கோடியே 12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in