

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, இன்று பால் விநியோகத்துக்கு தடையில்லை. மருத்துவமனை, மருந்தகங்கள்இயங்கலாம். மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள்இயங்க அனுமதிக்கப்படும்.பொதுமக்கள் அவசிய காரணங்களின்றி வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அவசியமின்றி சுற்றித் திரிந்தால் அவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுத்து,அதிக அபராதம் விதிக்கவும்,வழக்கு பதிவு செய்யவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இதற்கிடையே நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பழம், பூ, காய்கறி கடைகளில் நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. அதேபோல் இறைச்சிக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந் தது.