சென்னை அருகே சாலை விபத்து: நடிகர் நாசர் மகன் படுகாயம்

சென்னை அருகே சாலை விபத்து: நடிகர் நாசர் மகன் படுகாயம்
Updated on
1 min read

சென்னை கிழக்குகடற்கரைச் சாலை அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் நடிகர் நாசர் மகன் படுகாயமடைந்தார்.

மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது டேங்கர் லாரியுடன் கார் மோதியது. இதில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நடிகர் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்தார்.

சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சென்னையில் உத்தமவில்லன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் நாசர் மருத்துவமனைக்கு விரைந்தார்.

பைசில் நாசர், சைவம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவர் நாசரின் மூத்த மகனாவார்.

சம்பவம் குறித்து காஞ்சிபுரம் போலீஸார் கூறுகையில்: "விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பைசில் நாசர், அவரது நண்பர் விஜயகுமார் ஆகிய இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக இருக்கிறது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in