

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி நீர் போக்குவரத்து ஓடை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். கடைகளை இழக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடத்தில் கடைகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரச் செயலாளர் எல்.பி. ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் எம்.தெய்வேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசுப்பு, ஆர்.விஜயலட்சுமி, பி.மணி, ஆர்.கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் முழங்கினர்.