கேரள வியாபாரிகள் வராததால் ஓணம் சீஸன் காய்கறி வியாபாரம் மந்தம்

கேரள வியாபாரிகள் வராததால் ஓணம் சீஸன் காய்கறி வியாபாரம் மந்தம்
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தைக்கு தென் மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. மொத்த வியாபாரிகள் ஏலத்தில் காய்கறிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து பாவூர்சத்திரம் சந்தைக்கு அதிகளவில் வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் மந்தமாக உள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. வழக்கமாக ஓணம் பண்டிகையையொட்டி கேரள வியாபாரிகள் பாவூர்சத்திரம் சந்தையில் குவிவர். வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால், காய்கறி விலையும் அதிகரிக்கும். ஆனால், இந்த ஆண்டில் ஓணம் பண்டிகைக் காலத்திலும் பாவூர்சத்திரம் சந்தையில் காய்கறிகள் வியாபாரம் மந்தமாகவே உள்ளது.

விறுவிறுப்பில்லை

இதுகுறித்து பாவூர்சத்திரம் சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, பாவூர்சத்திரம் சந்தையில் வியாபாரம் மந்தமாகவே உள்ளது. வழக்கமாக ஓணம் பண்டிகையையொட்டி கேரளா வில் இருந்து மட்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி வழக்க மாக வரும் வியாபாரிகள் கூட வரவில்லை. இதனால் காய்கறிகள் விற்பனை விறுவிறுப் படையவில்லை. விலையும் குறை வாகவே உள்ளது.

விலை நிலவரம்

சின்ன வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 35 ரூபாய் வரையும், உள்ளூர் பெரிய வெங்காயம் 7 முதல் 12 ரூபாய் வரையும், மகாராஷ்டிர மாநில பெரிய வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. உருளைக்கிழக்கு 30 ரூபாய்க்கும், தக்காளி 20 ரூபாய்க்கும், மிளகாய் 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சுரைக்காய் 7 ரூபாய்க்கும், பூசணிக்காய் 10 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகள் வரத்தும் குறைவாகவே உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும், ஞாயிற்றுக் கிழமை தளர்வில்லா ஊரடங்கு அனுசரிக்கப்படுவதாலும் 2 நாட்கள் பாவூர்சத்திரம் சந்தை இயங்காது. வெள்ளிக்கிழமை (நேற்று) வழக்கமான வியாபாரமே இருந்தது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in