அலட்சியத்தால் நோய் முற்றி சிகிச்சைக்கு வருகின்றனர்: நெல்லை மாவட்ட ஆட்சியர் கவலை

அலட்சியத்தால் நோய் முற்றி சிகிச்சைக்கு வருகின்றனர்: நெல்லை மாவட்ட ஆட்சியர் கவலை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர் பாக மருத்துவ அலுவலர் களு டன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆலோசனை மேற் கொண்டார்.

அப்போது ஆட்சியர் பேசிய தாவது:

ஒருசிலருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தும் எவ்வித பரிசோதனையும் செய்யாமல் இருந்து, காலதாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்தது தெரியவந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அறிக்கை யின்படி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டு 7 நாட்களாக மருத்துவ சிகிச்சை பெறாமல் காய்ச்சலில் இருந்துள்ளார். அவரது உறவினர்களின் வற்புறு த்தலால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஆனால் மூச்சுத் திணறல் காரணமாக இறப்பு ஏற்பட்டுள்ளது.

அலட்சியமாக இருந்து, உடலில் நுரையீரல் உள்பட முக்கிய பகுதிகளில் அதிக தாக்கம் ஏற்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

இந்நிலை மிகவும் வருந்தக் கூடியது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in