

திமுக தலைவர் கருணா நிதியின் திருவாரூர் பயணம் திடீரென ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான கரு ணாநிதி, தனது தொகுதியில் பள்ளிக் கட்டிடம் திறப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக செப்டம்பர் 20, 21 தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப் பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கருணாநிதி நேற்று வெளியிட்ட செய் தியில், ‘‘எதிர்பாராத வகை யில் ஏற்பட்ட உடல் நலிவின் காரணமாக வரும் 20, 21 ஆகிய தேதிகளில் திருவாரூர் தொகுதியில் நான் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப் படும்’’ என அவர் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளார்.