Published : 29 Aug 2020 06:48 AM
Last Updated : 29 Aug 2020 06:48 AM

அமேசான், பேடிஎம் செயலிகள் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்

அமேசான், பேடிஎம் செயலிகள் மூலம், சமையல் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. தமிழகத்தில் 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையாக பேடிஎம், அமேசான் ஆகியநிறுவனங்களின் செயலி மூலமாகசிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

இதன்படி, அமேசான், பேடிஎம் செயலியில் சிலிண்டர் முன்பதிவு செய்ய, அவற்றில் உள்ள ‘பே பில்’ என்ற பகுதிக்குச் சென்று காஸ் சிலிண்டர் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர், தொடர்புடைய எண்ணெய் நிறுவனத்தைத் தேர்வு செய்த பின்னர், பதிவு செய்த மொபைல் எண் அல்லது சிலிண்டர் இணைப்பு எண்ணை பதிவு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். காஸ் ஏஜென்சி மூலமாக சிலிண்டர் வீட்டுக்கு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x