ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவுக்கு ஆளுநர் தமிழிசை இரங்கல்

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவுக்கு ஆளுநர் தமிழிசை இரங்கல்
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் வசந்தகுமார் இன்று கரோனா தொற்றால் உயிரிழந்தார். தனது சித்தப்பாவின் மறைவிற்கு கண்ணீருடன் பழைய நினைவுகளை அசைபோட்டு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநரும், வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளுமான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இரங்கல்:

சித்தப்பா !

நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...

என் சிறு வயது முதல் அவருக்குத் திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்...

அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்...

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர ரத்த பாசம் இருவரிடமும் உண்டு,

தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது...

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்குப் பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது...

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...

கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...

- தமிழிசை சவுந்தரராஜன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in