

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்தி காங்கிரஸ் கமிட்டி செயலரும் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார்.
மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தளவாய் பாண்டியன், நகர தலைவர் வெயிலுமுத்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மீனாட்சிசுந்தரம், மாயக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. அளித்த பேட்டியில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும்மேல் குறைந்துள்ளது, ஏழை நடுத்தர மக்களை வஞ்சிக்க கூடியதாக இத்தேர்வு அமைந்துள்ளது.
கரோனா காலத்தில் நீட் தேர்வை நடத்துவது மிகவும் அவமானகரமான செயலாகும். மேலும் இத்தேர்வு மாணவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக உள்ளது என்றார்.