Published : 28 Aug 2020 05:31 PM
Last Updated : 28 Aug 2020 05:31 PM

மனநலத் தொழில்முறை சார்ந்தோர் பதிவு கட்டாயம்: தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உத்தரவு

சென்னை

மனநலத் தொழில்முறை சார்ந்து இயங்கும் கிளினிக்கல் உளவியலாளர்கள், மனநலச் செவிலியர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மனநல ஆணையத்தில் அவர்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“மனநலப் பாதுகாப்புச் சட்டம் 55(d) of Mental Healthcare Act,2017-ன் கீழ் ஆணையத்தின் முதல் ஆண்டு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி மனநலத் தொழில்முறை சார்ந்தோர்களான கிளினிக்கல் கொண்ட பதிவு ஒன்றினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மனநலப் பாதுகாப்புச் சட்டம் section 2(1) (of Mental Healthcare Act ,2017 ) ஆகிய உட்பிரிவுகளின்படி வரையறை செய்யப்பட்ட கிளினிக்கல் உளவியலாளர்கள், மனநலச் செவிலியர்கள், மனநலச் சமூகப் பணியாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மனநல ஆணையத்தில் அவர்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

சட்டத்தின் நகலை http://www.egazette.nic.in/writereaddata/2017/175248.pdf என்ற இணைப்பில் காணலாம், அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள மேலே குறிப்பிட்ட மனநலத் தொழில் முறை சார்ந்தோர்கள் ஒவ்வொரு நபரும், ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளும்படி www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பதிவேடு தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் இருப்பதோடு பதிவு இணையதளத்தின் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும். தரவிறக்கம் செய்து நிரப்பப்பட்ட தலைமைச் செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநலக் காப்பக வளாகம், மேடவாக்கம் குளம்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

Executive Officer, Tamil Nadu State Mental Health Authority, Chennai என்ற பெயரில் பதிவுக் கட்டணமாக ரூ.500க்கு எடுக்கப்பட்ட வரைவோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

1. பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை பதிவுகள் அமலில் இருக்கும்.

2. பதிவு செய்யப்பட்ட மனநலத் தொழில்முறை சார்ந்தோர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
பதிவுக் கட்டணம் ரூபாய் 500 செலுத்தி மறுபதிவு செய்துகொள்ள வேண்டும்.

3. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி மாநில ஆணையம், மாவட்ட வாரியாக மனநலத் தொழில்முறை சார்ந்தோர்களின் மாநிலப் பட்டியலை ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x