

மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்ட அட்டாக் பாண்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸார் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான அட்டாக் பாண்டியை, நேற்று மாலை 5.40 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் மதுரை நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர்.
அட்டாக் பாண்டியின் முகத்தை மூடியபடி மதுரை 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அவரை நீதிபதி ஆர்.பாரதிராஜா முன் ஆஜர்படுத்தினர். அவரிடம் பெயர், தந்தை பெயர், முகவரியை சொல்லுமாறும், உங்களை எந்த வழக்கில் கைது செய்துள்ளனர் எனத் தெரியுமா? போலீஸார் துன்புறுத்தினார்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் அட்டாக் பாண்டி, தந்தை பொன்னுச்சாமி, முகவரி: எண் 20, வேதமுதலி தெரு, கீரைத்துறை. கொலை வழக்கில் என்னை கைது செய் துள்ளனர். போலீஸார் என்னை துன்புறுத்தவில்லை என அட்டாக் பாண்டி கூறினார். இதையடுத்து அட்டாக்பாண்டியை அக்.6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அட்டாக்பாண்டியை 10 நாட் கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வா ளரின் மனுவை அரசு வழக்கறிஞர் வி.கனிமொழி தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து, மனுவுக்கு அட்டாக் பாண்டி தரப்பில் பதிலளிக் கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அட்டாக் பாண்டியின் வழக் கறிஞர் மணிகண்டன் நீதிமன்ற வளாகத்தில் எதிரியை முகத்தை மூடி அழைத்துவரக் கூடாது. அட்டாக் பாண்டியை வெளியே அழைத்துச் செல்லும்போது முகத்தை மூடக்கூடாது என உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அட்டாக் பாண்டியை முகத்தை மூடாமல் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வெளியே போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், அவர் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.