தந்தை இறந்தது தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பை வழிநடத்திய பெண் ஆய்வாளருக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்

தந்தை இறந்தது தெரிந்தும் சுதந்திர தினவிழா அணிவகுப்பை வழிநடத்திய பெண் ஆய்வாளருக்கு ஆட்சியர் நற்சான்றிதழ்
Updated on
1 min read

தனது தந்தை இறந்தது தெரிந்தும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் காவல்துறையினரின் அணிவகுப்பை வழிநடத்திய காவல் ஆய்வாளர் மகேஸ்வரிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நற்சான்றிதழ் வழங்க பாராட்டினார்.

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த அணிவகுப்பை பாளையங்கோட்டை ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று வழிநடத்தினார்.

அதற்கு முந்தைய நாள் தனது தந்தை நாராயணசுவாமி மரணமடைந்தது குறித்து தெரியவந்திருந்தாலும், கடைமை உணர்வுடன் சுதந்திரன அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய மகேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் அவரது மனஉறுதிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மகேஸ்வரிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நற்சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in