Published : 27 Aug 2020 08:03 AM
Last Updated : 27 Aug 2020 08:03 AM
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழக அரசு, இது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டுள்ளதுடன், தொழில் நுட்ப குழுவையும் அமைத்துள்ளது.
இதுதொடர்பாக வேளாண் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், வேளாண் துறை இயக்குநர் இந்த சட்டத்துக்கான வரைவு விதிகளை அரசுக்கு அனுப்பியிருந்தார். அந்த விதிகளை அரசு பரிசீலித்து அவற்றை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன்படி, வேளாண் மேம்பாடு, வேளாண் மண்டல பாதுகாப்பு தொடர்பாக வேளாண் பொறியியல்துறையுடன் ஆலோசனை நடத்தி, ஆண்டுதோறும் மார்ச் இறுதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை வேளாண்துறை தயாரித்து, வேளாண் மண்டலத்துக்கான ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல், நிலம், நீர் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்வாதாரம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேலும் சேர்க் கப்பட வேண்டிய பகுதிகள், வேளாண்மை தொழிற்பிரிவுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை ஆணையம் வழங்கும். ஆணையத்துக்கு உதவ, வேளாண் துறைச் செயலர் தலைமையில், வேளாண் துறை இயக்குநரை உறுப்பினர் செயலராக வும், தோட்டக்கலைத் துறை இயக்குநர் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும். இக்குழு வேளாண்மை மண்டலத்தில் தேவையான வற்றை சேர்த்தல், இல்லாத
வற்றை நீக்குதல் போன்றவற்றுக்கான ஆலோசனை களை வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!