அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணையதளத்தில் பதிவை புதுப்பிக்கும் வசதி: அமைச்சர் நிலோஃபர் கபீல் தொடங்கி வைத்தார்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான இணையவழி சேவையை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் (பொறுப்பு) அ.யாஸ்மின் பேகம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான இணையவழி சேவையை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். உடன் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் (பொறுப்பு) அ.யாஸ்மின் பேகம்.
Updated on
1 min read

அமைப்பு சாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலம் பதிவை புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் நிலோஃபர் கபீல் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின்கீழ் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் இயங்கி வருகின்றன. கரோனாஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கும், பதிவை புதுப்பிக்கவும், கல்வி, மகப்பேறு, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிக்கான கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த சிரமத்தைப் போக்கும் விதமாக முதல்கட்டமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், அவர்கள்இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் மூலம்https://labour.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் உறுப்பினர்களாக பதிவு செய்யும் வசதி கடந்த ஜூன்19-ம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு, ஜூலை 20 முதல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த 17 வாரியங்களிலும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளும் வசதி, நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பிக்கும் வசதி மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் வசதி, மாவட்டங்களுக்கு இடையே உறுப்பினர் பதிவை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

தொழிலாளர் துறை அமைச்சர் நிலோஃபர் கபீல், தலைமைச் செயலகத்தில் இணையதளம் மூலம் புதுப்பித்தல், மனுக்களை சமர்ப்பிக்கும் வசதியை தொடங்கிவைத்து, அதன் அடையாளமாக 6 தொழிலாளர்களுக்கு புதுப்பித்தலுக்கான சான்றிதழ், 4 தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், விபத்து மரணத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறைச் செயலர் முகமது நசிமுத்தின், தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியச் செயலாளர் அ.யாஸ்மின் பேகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in