

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய வர்கள், வரும் 9, 10 தேதிகளில் தட்கல் முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்கென அரசு சேவை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ள பள்ளிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், தட்கல் முறை யில் ஆன்லைனில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் விண்ணப் பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தனித் தேர்வர்கள் விண்ணப் பிப்பதற்காக கல்வி மாவட்ட வாரி யாக தேர்வுத்துறை மூலம் சேவை மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
நேரடி தனித்தேர்வர்கள் ரூ.150, இதர கட்டணம் ரூ.35 மற்றும் ரூ.3 என மொத்தம் ரூ.187-ம் மற்றும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 மற்றும் ஆன் லைன் பதிவு கட்டணம் ரூ.50-ம் ஆகிய தொகையை சேவை மையத்தில் செலுத்த வேண்டும். இதனுடன் ஏற்கெனவே எழுதிய தேர்வுக்கான சான்றுகளை இணைக்க வேண்டும்.
மேலும், தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங் கப்படும் அனுமதி தற்காலிக மானது. விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப் பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத் தில், செங்கல்பட்டு அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயின்கொலம்பாஸ் பள்ளி, மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரம் சென் செபாஸ்டின் பள்ளி ஆகிய வற்றிலும் காஞ்சிபுரம் கல்வி மாவட் டத்தில் காஞ்சிபுரம் பி.எஸ்.எஸ். நகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வற்றிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவை மையங்களை அணுகலாம்.