

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் ரத்த வங்கி செயல்பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டுமே ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ரத்த வங்கியில் சிறப்பு முகாம்களை தவிர்த்து மாதம்தோறும் தன்னார்வலர்கள் 120 முதல் 150 பேர் வரை வந்து ரத்தானம் செய்வர்.
ஆனால், தற்போது கரோனா அச்சம்நிலவுவதால் மருத்துவமனை ரத்தவங்கியில் ரத்தம் கொடுக்க தயங்குகின்றனர். ரத்த வங்கியின் ஒருங்கிணைப்பாளர் அருள் கூறும்போது, “ரத்தம் வழங்க வருபவர்களிடம் கரோனா குறித்த அச்சம் ஏற்கெனவே இருந்தது. நாங்கள் ரத்தம்கொடுக்கும் தன்னார்வலர்களை ஊக்குவித்ததன் மூலம் இப்போது மீண்டும் ரத்தம் கொடுக்கின்றனர்’’ என்றார்.