Published : 26 Aug 2020 06:57 AM
Last Updated : 26 Aug 2020 06:57 AM

மிதிவண்டி சவாலில் பங்கேற்க வேண்டும்: மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் அழைப்பு

மிதிவண்டி சவாலில் பங்கேற்க பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிதிவண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ‘இந்தியா சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச்’ என்ற சவாலை அறிவித்து பொதுமக்களின் கருத்து மற்றும் அனுபவத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சவாலில் நாடு முழுவதும் 95 நகரங்கள் பங்கேற்க உள்ளன.

சென்னை மாநகரில் உள்ள பொதுமக்கள் இந்த சவாலில் பங்கேற்க https://forms.gle/7Q4RFUBy8QGQ7JaZ என்ற இணைப்பை பயன்படுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்து பங்கு பெறலாம். இந்த சவாலில் சமூகநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கு பெற்று கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேலும், மிதிவண்டி குறித்த தங்களது அனுபவம், கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை 20 விநாடிகளுக்கு உட்பட்ட செல்பி வீடியோவாக பதிவு செய்து 9445190856 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம். நீங்கள் பதிவிட்ட வீடியோ சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இடம் பெறும்.

இந்த சவால் பற்றிய முழு விவரங்களை இணையத்தின் மூலம் Support your City, Chennai Cycling Preferences Survey ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். எனவே, சென்னை மாநகர மக்கள் சென்னையை சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றி பசுமை சென்னையை உருவாக்க ஏதுவாக மிதிவண்டி குறித்த தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து “இந்தியா சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச்” போட்டியில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x