சுற்றுச்சூழல் மாசு, தொற்றுநோய்களை தடுக்க அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை: ரயில்வே அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழல் மாசு, தொற்றுநோய்களை தடுக்க அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை: ரயில்வே அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சுற்றுச்சூழல் மாசு மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை உத்தங்குடியை சேர்ந்த டி.தர்பார்ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

இந்தியாவில் தினமும் 40 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படு கின்றன. இந்த ரயில்களில் உள்ள கழிப்பறைகளை தினமும் 4 லட்சத்துக்கும் அதிக பயணி கள் பயன்படுத்துகின்றனர். இத னால் தினமும் 400 டன், ஆண் டுக்கு 1.46 லட்சம் டன் மனிதக் கழிவுகள் தண்டவாளப் பகுதி களில் தேங்குகின்றன. இந்தக் கழிவுகளில் 6 மில்லியன் வைரஸ் கள், பாக்டீரியாக்கள் உற்பத்தி யாகி, அவை காற்றின் மூலம் பரவுகின்றன.

இதனால் ரயில் நிலையங்கள், தண்டவாளங்களின் அருகில் 20 கோடி மக்களும், ரயில் நிலையங் களில் பணிபுரிவோரும் பல் வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். ரயில்வே தண்ட வாளங்களில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வசிப்பவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படுகின்றன. இந்த மனிதக் கழிவுகள் நீருடன் கலக்கின்றன. அந்த தண்ணீரை பருகும் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன. வெயில் காலத்தில் கழிவுகள் பவுடராக மாறி காற்றில் பரவுவதால் அந்தக் காற்றை சுவாசிப்பவர்களும் நோயாளி ஆகின்றனர்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலை நாடுகளில் ரயில்களில் பசுமை கழிப்பறை அமைக்கப்பட்டு மனிதக் கழிவுகள் தண்டவாளப் பகுதியில் கொட்டுவது தவிர்க்கப் படுகிறது. 2008-09 நிதி ஆண்டில் பயணிகள் ரயிலில் பசுமை கழிப் பறை அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இருப் பினும் இந்தத் திட்டம் அமலுக்கு வரவில்லை.

எனவே, சுற்றுச்சூழல் பாதிப் பைத் தவிர்க்கவும், சுகாதார மேம்பாட்டுக்காவும் இந்தியாவில் அனைத்து பயணிகள் ரயில்களி லும் பசுமை கழிப்பறை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் பி.எஸ்.மெல்டியூ வாதிடும்போது, ஒரு ஆண்டில் அனைத்து ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைத்துவிட முடியும் என்றார்.

இதையடுத்து, அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது தொடர்பாக மனுதாரர் 14.7.2014ம் தேதி அனுப்பிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in