

சாத்தூர், கோவை பட்டாசு வியாபாரிகளிடம் ரூ.4.63 கோடி மோசடி செய்த வழக்கில் திருச்சியை சேர்ந்த தனியார் மார்க்கெட்டில் நிறுவன அதிபரின் ஜாமீன் மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தூர் காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ். இவரிடம் திருச்சி இன்பி கேலக்ஸி மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் அழகர்சாமி என்ற ராஜா, கடந்த 2014-ல் தனது நிறுவனத்தின் பெயரில் ரூ.ஆயிரம் மதிப்புள்ள ஒரு லட்சம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் தயாரித்து கொடுக்க ஆர்டர் கொடுத்துள்ளார்.
பின்னர் கோவிந்தராஜூவிடம் கடனாக ரூ.1.30 கோடியும், ரூ.1.42 கோடி மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளையும், கோவை அசோக்கிடம் ரூ.1.91 கோடி கடனும் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
ரூ.4.63 கோடி மோசடி செய்ததாக மதுரை குற்றப்பிரிவு போலீஸார் 2019-ல் ராஜா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜா, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
ராஜா ஜாமீன் கேட்டு மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவர் கார்த்திக்கேயன் உத்தரவிட்டார்.