

திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று இரவும் பலத்த மழை பெய்தது.
திருச்சி மாவட்டத்தில் ஆக.23-ம் தேதி இரவு இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. மொத்தம் 922.70 மி.மீ. மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 120.80 மி.மீ., கல்லக்குடியில் 110.20 மி.மீ. மழை பதிவாகியது.
இந்நிலையில், நேற்று (ஆக.24) இரவும் பலத்த மழை பெய்தது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் இன்று (ஆக.25) காலை நிலவரப்படி மொத்தம் 559 மி.மீ. மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக முசிறியில் 91 மி.மீ., மருங்காபுரியில் 70.40 மி.மீ. மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
விமான நிலையம் 43.80, ரயில்வே ஜங்ஷன் 36.80, திருச்சி நகரம் 35, பொன்மலை 34.20, நவலூர் குட்டப்பட்டு 32, துறையூர் 29, பொன்னணியாறு அணை 25.40, வாத்தலை அணைக்கட்டு 23.40, கோவில்பட்டி 22.20, புலிவலம் 20, மணப்பாறை 16.40, தேவிமங்கலம் 14, சிறுகுடி 12, துவாக்குடி 11.