

கூடங்குளம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால், 84 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக் காக கடந்த மே 31-ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப் பட்டுவந்த நிலையில், வால்வு கோளாறு காரணமாக கடந்த மாதம் 21-ம் தேதி இந்த உலையி லும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன், அதில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 950 மெகாவாட் மின் சாரம் கிடைக்காமல்போனது.
இந்நிலையில், 2-வது அணு உலையில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4-ம் தேதி மின்உற்பத்தி மீண்டும் தொடங்கி யது. பராமரிப்பு பணிகள் நிறை வடைந்ததை அடுத்து 84 நாட்க ளுக்குப்பின் நேற்று மீண்டும் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கியது. நேற்று மாலையில் 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டி ருந்தது. ஓரிரு நாட்களில் முழு அளவில் மின் உற்பத்தி எட்டப்படும் என்று, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.