திருமயம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பையா காலமானார்

சுப்பையா.
சுப்பையா.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ சுப்பையா, மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வ.சுப்பையா (69). இவர், கடந்த 1968-ல் திமுக சார்பில் பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 1989 முதல் 1991 வரை திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.

கட்சியில் மாவட்டப் பிரதிநிதி, மாவட்டத் துணைச் செயலாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தார்.

இந்நிலையில், சுப்பையா நேற்று (ஆக.23) இரவு மாரடைப்பால் காலமானார். மாரடைப்பால் உயிரிழந்த சுப்பையாவின் உடலுக்கு பொன்னமராவதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் இன்று (ஆக.24) நடைபெற்ற இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஆலவயலில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இவரது முதல் மனைவி அமிர்தம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்ட நிலையில், ரத்தினம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது 4 மகன்கள், 2 மகள்களில் ஒரு மகள் ஏற்கெனவே இறந்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in