நீர்வரத்து ஓடைகளை தூர்வாரக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீர்வரத்து ஓடைகளை தூர்வாரக் கோரி கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடைகளை தூர்வார வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே அய்யநேரி கிராம மாலுக்கு உட்பட்ட அய்யநேரி செவல்குளத்துக்கு வரக்கூடிய நீர்வரத்து ஓடையை தூர்வார வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ்.ரெங்கநாயகலு, பொதுச்செயலாளர் பி.பரமேஸ்வரன், மாநில இணையதள பொறுப்பாளர் ராஜ்குமார், இளையரசனேந்தல் பிரிக்கா உரிமை மீட்புக்குழு தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி வட்டம், அய்யனேரி கிராம மாலுக்கு உட்பட்ட சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட அய்யநேரி செவல்குளம் உள்ளது.

இங்குள்ள வெங்கடாச்சலபுரம் பூவன காவலன் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் செவல்குளம் கண்மாய்க்கு வரும். ஆனால், நீர்வரத்து ஓடை மண்மேடாகி உள்ளதால், தண்ணீர் சரிவர வந்து சேரமுடியாமல் பல ஆண்டுகளாக கண்மாய் முழுமையாக நிரம்பாமல் உள்ளது.

எனவே அய்யநேரி செவல்குளத்துக்கு வரும் நீர்வரத்து ஓடையை தூர்வாரி தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும்.

அரசு நிதி ஒதுக்க தாமதம் ஆகும் பட்சத்தில் கிராம மக்களே சுயமாக மராமரத்து பணி செய்ய தயாராக உள்ளனர். அதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in