

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
கடலூர் கோண்டூரில் உள்ள டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வந்தார். விஷ்ணுபிரியா படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவர், விஷ்ணுபிரியா தந்தைக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் முத்தரசன் கூறும்போது, “நேர்மையான இளம் அதிகாரியை இழந்து இருக்கிறோம். இதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. இந்த விஷ யத்தில் உண்மை வெளியேவர வேண்டுமானால் சிபிஐ விசாரணை நடந்தால்தான் சரியாக இருக்கும். ஏற்கெனவே வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இப்போது விஷ்ணுபிரியா இறந்து இருக்கிறார். தமிழ்நாட்டில் நேர்மை யான அதிகாரிகளுக்கு இடமில்லை என்பதை இது காட்டுகிறது” என்றார்.
திருமாவளவன் வலியுறுத்தல்
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலை மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கடலூரில் பழைய ஆட்சி யர் அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப் போது கட்சித் தலைவர் திருமாவள வன் கூறியதாவது:
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத் தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருப்ப வர்கள் வழக்கை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு மில் அதிபர் ஜெகன்நாதன் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விஷ்ணுபிரி யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதுபோல உயர் அதிகாரிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்துள் ளனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி அதே இடத்தில் இருக்கும்போது சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும். எனவே, சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துகிறோம் என்றார்.
‘மகள் இறப்பை கொச்சைப்படுத்துகிறார்கள்’
ஆறுதல் தெரிவிக்க வந்த முத்தரசனிடம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கூறும்போது, ‘எங்கள் மகள் விஷ்ணுபிரியாவை இழந்தது தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அவள் மரணம் குறித்து நடக்கும் விசாரணை நேர்மையாக செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஒரு விசாரணை நடக்கிறது என்றால் அதில் கிடைக்கும் தகவல்களை வெளியே சொல்லக் கூடாது. ஆனால், தகவல்களை வெளியே சொல்வதோடு தவறான தகவல்களையும் கசியவிட்டு விஷ்ணுபிரியா இறப்பை கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. சிபிசிஐடி விசாரணை வேறு மாதிரியாக இருக்கிறது. காதல் என்று ஏதேதோ கூறுகிறார்கள். எனவே, சிபிஐ விசாரணை வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்” என்றார்.