107-வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு ஜெயலலிதா, கருணாநிதி மரியாதை

107-வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு ஜெயலலிதா, கருணாநிதி மரியாதை
Updated on
1 min read

அண்ணாவின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்துக்கு முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று காலை 10 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா பிறந்த நாள் சிறப்பு மலரை ஜெயலலிதா வெளியிட தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பெற்றுக் கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. உள்ளிட் டோர் அண்ணா உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதி மரியாதை:

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலா ளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் உருவப் படத்துக்கு கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை அசோக் நகரில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்ணா வின் உருவப் படத்துக்கு கட்சியின் முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in