Published : 24 Aug 2020 08:08 AM
Last Updated : 24 Aug 2020 08:08 AM

யானையின் முக்கியத்துவம் குறித்துபாடல் எழுதிய வனக் காப்பாளர்

கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட கெம்பனூர் பகுதியில் வனக் காப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் சோழமன்னன். இவர், 'என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை' என்று தொடங்கும் யானையின் முக்கியத்துவம் குறித்த பாடலை எழுதி, 'என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை' என்று தொடங்கும் சினிமா பாடலின் பின்னணி இசைக்கு ஏற்றவாறு பாடி, வாட்ஸ்அப்-ல் பதிவிட்டுள்ளார்.

மொத்தம் 4 நிமிடங்கள் 30 விநாடிகள் கொண்ட இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் வைரலானது. இதையறிந்த கோவை வனக் கோட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ் ஆகியோர், வனக் காப்பாளர் சோழமன்னனை பாராட்டினர். இதுகுறித்து சோழமன்னன் கூறும்போது, "ஏற்கெனவே கரோனா குறித்த ஒரு விழிப்புணர்வுப் பாடலை எழுதிப் பாடியுள்ளேன். இசை மீது கொண்ட ஆர்வத்தால், யானைகள் தினத்தை முன்னிட்டு ஒரு பாடலை எழுதி, பாடி, பதிவிட்டேன். அந்தப் பாடல் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x