சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வைகோ வழக்கு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் சீமைக் கரு வேல மரங்களை வேரோடு அகற்ற மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் அவர் பொதுநலன் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் வைகோ கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நீர் நிலைகளில் ஏற்கெனவே வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியை 4 வாரங்களில் முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு 13.10.2013-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

இதனால், உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆளுகைக்குட்பட்ட மதுரை உட்பட 13 மாவட்ட ஆட்சியர்களுக்கும் 8.8.2015-ல் மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேருடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in