Published : 23 Aug 2020 11:56 AM
Last Updated : 23 Aug 2020 11:56 AM

யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பார்வை சவால் கொண்ட பூர்ண சுந்தரிக்கு 'ஆர்கேம்' கருவி: திமுக எம்.எல்.ஏ. ஏற்பாடு

யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பூர்ண சுந்தரிக்கு கண்பார்வைக்கு உதவும் அதிநவீன ஆர்கேம் (ORCAM) கருவியினை வழங்க திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் ஏற்பாடு செய்துள்ளார்.

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்த பூர்ண சுந்தரி, யூபிஎஸ்சி தேர்வு வாரியம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் மாநில அளவில் 286-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பூர்ண சுந்தரிக்கு ஏற்கெனவே திமுக தலைவர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் பூர்ண சுந்தரியின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு ESIGHT என்ற சுமார் 8 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டில் இருந்து வரவழைத்து பார்வை கிடைக்க முயற்சி செய்தார்.

அப்பெண்னை மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். பரிசோதனையில் அவருக்கு பார்க்கும் அனைத்தும் ஒலியாக கொண்டு செல்லும் ஆர்கேம் என்ற அதிநவீன கருவி பொருந்தப்பட்ட கண்ணாடியினைப் பொருத்தலாம் என்று மருத்துவர்கள் குழு ஆலோசனை வழங்கினர்.

ரூபாய். 3 லட்சம் மதிப்பிலான ORCAM கண்ணாடியினை டாக்டர்.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் வழங்க முன்வந்துள்ளார். அதனை, திமுக தலைவர் ஸ்டாலின் வழங்க ஏற்பாடு செய்யப் போவதாக டாக்டர் சரவணன் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் அதிநவீன ORBIT READER என்ற எளிதாகப் படிக்க உதவும் BRAILLE கருவியினையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இது போன்று கண் பார்வை குறைபாடு உள்ள அனைவருக்கும் உதவும் ELECTRONIC GADGETS பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x