Last Updated : 23 Aug, 2020 11:07 AM

 

Published : 23 Aug 2020 11:07 AM
Last Updated : 23 Aug 2020 11:07 AM

மத்திய அரசு உத்தரவால் புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து

இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து புதுச்சேரி அரசின் அறிவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவுபடி புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு இ- பாஸ் வழங்க வைத்துள்ள இணையதளம் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பொதுமக்கள் வெளியூர் செல்லவும், வெளி மாநிலங்கள் செல்லவும், பொருட்கள் கொண்டு செல்லவும், தனியாக அனுமதியோ, இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவுப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x