Published : 22 Aug 2020 07:54 AM
Last Updated : 22 Aug 2020 07:54 AM

ஆவடி அருகே வழிப்பறிகளை தடுக்க நள்ளிரவில் காவல் ரோந்து வாகனங்கள் அணிவகுப்பு: துணை ஆணையர் தீபா சத்யன் நடவடிக்கை

ஆவடி அருகே பட்டாபிராம் காவல் சரகத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி - சி.டி.எச். சாலையில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க, நேற்று முன்தினம் நள்ளிரவில் காவல் துறை ரோந்து வாகனங்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

ஆவடி

ஆவடி அருகே வழிப்பறிகளை தடுக்க நேற்று முன்தினம் நள்ளிரவில், 30 கி.மீ தூரத்துக்கு காவல் துறை ரோந்து வாகன அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு காரணமாக, தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க் கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை யில், பாடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் வழிப்பறி சம்பவங்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணைய ராக புதிதாக பொறுப்பேற்றுள்ள தீபா சத்யன், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் நள்ளிரவு வழிப்பறி சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவில், பட்டாபிராம் காவல் சரகத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி, திருநின்ற வூர், கொட்டாமேடு, பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் சி.டி.எச். சாலை, பூந்தமல்லி சாலை, பெரியபாளை யம் சாலைகளில் 30 கி.மீ தூரத் துக்கு காவல் துறை ரோந்து வாக னங்களின் அணிவகுப்பு நடை பெற்றது.

காவல் துறை துணை ஆணை யர், உதவி ஆணையர், 5 காவல் ஆய்வாளர்கள், 25 உதவி ஆய் வாளர்கள், 30-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய ரோந்து வாகனங்களின் சைரன் ஒலியுடன், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த அணி வகுப்பு நடைபெற்றது.

இதுகுறித்து, துணை ஆணையர் தீபா சத்யன் தெரிவித்ததாவது:

நள்ளிரவில் நிகழும் வழிப்பறி களை தடுக்கும் நோக்கிலும், வழிப் பறி சம்பவங்களால் பொதுமக்க ளுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் போக்கி, அவர்களை காக்க வலிமை யான காவல் படை உள்ளதை உணர்த்தவும் இந்த நள்ளிரவு ரோந்து அணிவகுப்பு நிகழ்வை தொடங்கியுள்ளோம். இந்த அணி வகுப்பை பட்டாபிராம் காவல் சரகம் மட்டுமல்லாமல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, எஸ்.ஆர்.எம்.சி. ஆகிய காவல் சரகங்களிலும், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்த பகுதிகள், குற்றவாளிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் படிப்படியாக நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x