Published : 22 Aug 2020 07:08 AM
Last Updated : 22 Aug 2020 07:08 AM

‘அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கட்டும்’- ஆளுநர், முதல்வர், தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆளுநர்பன்வாரிலால் புரோஹித், முதல்வர்பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தமிழக மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமையமனமார்ந்த வாழ்த்துகள். அறிவு,வளம், நல்வாய்ப்பு ஆகியவற்றின்திருவுருவாக விநாயகர் போற்றப்படுகிறார். நற்செயல்களை தொடங்கும் முன்பு விநாயகரை வணங்குவதால், தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். விநாயகரைப் போற்றி வழிபடுவதுடன், நாட்டு மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வோம். நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை இத்திருநாள் வாரி வழங்கட்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: வினைகளைத் தீர்ப்பவர், வெற்றிகளைத் தருபவர்,எளியவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் எளிமையான கடவுள் விநாயகர். பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும், வருங்கால முன்னேற்றத்துக்கு வித்திடுவதாகவும் இத்திருநாள் அமையட்டும்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சங்கடங்கள், தடைகளை நீக்கவல்ல முழுமுதற் கடவுள் விநாயகரை வணங்கி, அவர் திருவடி சரண் அடைபவர்களுக்கு, நல்லசொல்வளம், பொருள்வளம், உடல்நலம் ஆகிய அனைத்து வளங்களும் உண்டாகும். கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுளானவேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிகிடைக்கட்டும். அன்பு, அமைதிநிலவி, நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். இல்லம்தோறும் இன்பம், மகிழ்ச்சி பொங்கட்டும்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: நியமம், விதிகள் என்று பக்தர்களை கஷ்டப்படுத்தாமல் அவர்களுக்கு என்ன இயலுமோ, அதை அப்படியே ஏற்று அருள்புரியும் எளிமையான கடவுள் விநாயகர். தடைகளைத் தகர்க்கும் விநாயகரை சதுர்த்தி நன்னாளில் அனைவரும் கொண்டாடுவோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைய விநாயகர் அருள்புரியட்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். கரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் அகன்று, அனைவரும் உடல் ஆரோக்கியமும், பொருளாதார வளமும், மகிழ்ச்சியான வாழ்வும் பெற விநாயகர் துணை நிற்கட்டும்.

சமக தலைவர் சரத்குமார்: வாழ்வின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும், மகிழ்வும், மனநிறைவும் பெருக முழுமுதற் கடவுள் விநாயகர் அருள்புரியட்டும். அரசின் அறிவுறுத்தலை ஏற்று அவரவர் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்.

பாரிவேந்தர் எம்பி (ஐஜேகே): அறிவு, ஞானம், கல்வியின் வடிவமான முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு நம் மரபில் உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x