நெல்லையில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை: கிணற்றில் வீசப்பட்ட சடலங்கள் மீட்பு- திருநங்கைகள் முற்றுகையால் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பரபரப்பு

நெல்லையில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை: கிணற்றில் வீசப்பட்ட சடலங்கள் மீட்பு- திருநங்கைகள் முற்றுகையால் சுத்தமல்லி காவல் நிலையத்தில் பரபரப்பு
Updated on
1 min read

திருநெல்வேலியில் இரண்டு திருநங்கைகள் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அடுத்த சுத்தமல்லியில் திருநங்கைகளுக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசித்த திருநங்கைகளில் பவானி, அனுஷ்கா மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோரை நேற்று முதல் காணவில்லை. அவர்களை சக திருநங்கைகள் தேடி வந்தனர். காவல் நிலையில்த்திலும் புகார் அளித்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இருவரைப் பிடித்து சுத்தமல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் அளித்த தகவலின்படி பாளையங்கோட்டை நான்குவழிச்சாலை அருகே கிணற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் 3 பேர் உடல் மீட்கப்பட்டது.

காணாமல் போன திருநங்கைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சக திருநங்கைகள் சுத்தமல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கதறி அழுது வருவதால் அப்பகுதியே சோகமயமாகக் காட்சியளிக்கிறது.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in