

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 167 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,215 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் இதுவரை 6,554 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1358 வேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,61,435 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 8,048 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் 167 பேருக்கு தொற்று உறுதியானது.