Published : 21 Aug 2020 10:14 AM
Last Updated : 21 Aug 2020 10:14 AM

விநாயகர் சதுர்த்திக்கு பூஜை பொருட்கள் வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்தனர்: விழுப்புரத்தில் போலீஸார், நகராட்சி அதிகாரிகள் திணறல்

விழுப்புரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் குவிந்தனர்.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் கொழுக்கட்டை, சுண்டல், அருகம்புல், எருக்கம்பூ மாலை உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். இதற்கான பூஜைப் பொருட்கள், பழங்கள் வாங்க விழுப்புரம் நகரில் எம்ஜி ரோடு, பாகர்ஷா வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது.

முகக்கவசம் அணிய வேண்டும். சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கடை களில் 5 பேருக்கு மேல் நிற்கக் கூடாது என்ற நிபந்தனைகள் நடை முறையில் உள்ளன. ஆனால் தனிநபர் இடைவெளியை கடை பிடிக்காமல் பொதுமக்கள் திரண்டனர். காவல்துறை, நகராட்சி அதிகாரிகளும் இதனை கட்டுப்படுத்தமுடியாமல் திணறினர். இதற்கிடையே விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் விநாயகர் சிலைதயாரிக்குமிடத்திற்கு போலீஸார்நேரில் சென்றனர். அரசு உத்தரவுகளை மீறி யாருக்கும் சிலைகள் விற்பனை செய்யக்கூடாது. அதனை மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். எவ்வளவு சிலைகள் உள்ளன என்றும் கணக்கெடுப்பு நடத்தப்படும். இதுகுறித்துமீண்டும் ஆய்வு செய்வோம்என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

கரோனா பரவலை தடுக்கபொது இடங்களில் விநாயகர்சிலைகள் வைக்கவும் ஊர்வலத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தங்களின் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x