வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகள் விற்பனை: ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்

வீடுகளில் வைத்து வழிபட விநாயகர் சிலைகள் விற்பனை: ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்
Updated on
1 min read

விநாயகர் சதுர்த்தி பண்டிகைநாளை கொண்டாடப்பட உள்ளது.கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக கொண்டுசெல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வீடுகளில் வழிபாடு நடத்த வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள மாட வீதியில் சிறியஅளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை நேற்று முதல்தொடங்கியது.

தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் விநாயகர், இலையின்மீது அமர்ந்துள்ள விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் பலவண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களும் தங்களது வீடுகளில் வழிபாடு செய்வதற்காக ஆர்வமுடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர். இதே போல், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in