

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை பின்னணியில் உள்ள நாமக்கல் எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும், ‘லோக்கல்’ அமைச்சரின் ரத்த உறவுகளை விசாரிக்க வேண்டும் என வும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச் செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போஸீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்ற னர். இதனிடையே நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், பல ஆய்வாளர்களும் இடம் மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் உள்ள விஷ்ணு பிரியா வீட்டில் செப்.24-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விசாரண நடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கூறியதாவது;
எனது மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழையில்லை. அவர் திருச் செங்கோடு சென்ற நாள் முதல் அப்பகுதியில் நல்ல பெயர் எடுத்துள்ளார். ஒரு நம்பர் லாட்டரியை ஒழித்துக் கட்டினார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கத் தொடங்கியது முதல் அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தது உண்மை. எங்கள் வீட்டைச் சுற்றிலும் அடையாளம் தெரி யாத நபர்கள் சுற்றி வந்தனர். எங்களை (பெற்றோர்) வைத்து எனது மகளை மிரட்டி இருக் கலாம் என சந்தேகிக்கிறோம். எனது மகள் தற்கொலை செய்த விஷயத்தை சொன்ன நாமக்கல் எஸ்பி செந்தில்குமார், அவர் அறையை திறக்கப் போகி றோம். எப்போது வருகிறீர்கள் எனக் கேட்டார்.
அப்போது அவரது அறை யிலிருந்து கடிதங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் கூறினார். இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் அவரது இடது கண்ணுக்கு கீழ் புறத்தில் வீக்கம் இருந்தது. எனவே, எனது மகள் தற்கொலை வழக்கின் பின்னணியில் நாமக்கல் எஸ்பி செந்தில்குமார் இருக்கிறார் எனக் கருதுகிறேன். இவர் மீது துறை ரீதியாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. அதோடு ‘லோக்கல்’ அமைச்சரின் ரத்த உறவுகள் கொடுத்த நிர்பந்தம் காரண மாகவே அவர் இறந்திருக்கக் கூடும்.
வழக்கை திசை திருப்பும் நோக்கில் காதல் என்று கூறு வது அபத்தம். எனது மகள் சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி எடுத்தபோது, திருக் கோஷ்டியூர் நாராயணன் கோயி லுக்குச் செல்வார். அங்குள்ள குருக்களை எங்களுக்குத் தெரியும். எனவே வழக்கை திசை திருப்புவதை கைவிட்டு, எஸ்பி செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து விசாரிக்க வேண்டும். மேலும் அவரது அறையிலிருந்து கைப்பற்றப் பட்ட செல்போன்கள், லேப்- டாப் மற்றும் ஐ-பேட் ஆகிய வற்றில் உள்ள தடயங்களை பத்திரப்படுத்த வேண்டும்.
சிபிசிஐடி போலீஸார் என்னிடம் இதுவரை எதுவும் விசாரிக்கவில்லை. என்னிடம் விசாரணை நடத்தினால் எனக் குத் தெரிந்தவற்றை கூறுவேன். உண்மை வெளிவரும். அனைவரும் தண்டிக்கப்படு வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மகேஸ்வரியுடன் நட்பு ஏற்பட்டது எப்படி?
விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியான மகேஸ்வரியின் சொந்த ஊர் தேனி மாவட்டம். இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன் சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் படிக்கும்போது தோழியாக அறிமுகமாகியுள்ளனர். அது முதல் இருவரும் இணைபிரியா தோழிகளாக இருந்து வந்தனர். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் மகேஸ்வரியுடன்தான் விஷ்ணுபிரியா ஆலோசிப்பாராம்.
இந்நிலையில், விஷ்ணுபிரியா திடீரென தற்கொலை செய்துகொள்ள, மகேஸ்வரி மனம் பொறுக்க முடியாமல் பத்திரிகையாளர் களிடம் குமுறியுள்ளார்.
ஆனால் தற்போது மகேஸ்வரி, உடல்நிலை சரியில்லாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் மனநல பிரிவில் சிகிச்சை பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாகவும், ஆனால், எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.