Published : 20 Aug 2020 07:53 AM
Last Updated : 20 Aug 2020 07:53 AM

‘நுகர்வைத் தொடங்குவோம்; பொருளாதாரத்தை மீட்போம்’ டைட்டன் நிறுவனத்தின் புதிய முயற்சி

கோவிட்19 பெருந்தொற்று நோய் இந்தியாவில் பல தொழில்களையும் வணிகங்களையும் நசிவடையச் செய்துள்ளது. பலர் தம் வாழ்வாதாரத்தை இழந்து மாதக்கணக்காக தவித்து வருகின்றனர்.

இந்திய ஃபேஷன் பொருட்கள் வணிகத்தில் முன்னணி வகிக்கும் டைட்டன் நிறுவனம் இந்தச் சூழலை மாற்ற உறுதி பூண்டுள்ளது. பொதுமக்களின் நுகர்வுப் பழக்கத்தை மீட்பதே பொருளாதார சக்கரத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான ஒரே வழி என்று நம்புகிறது. தொழில்கள், வணிகம், வேலை, நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாம் ஒவ்வொருவரும் மற்றவருடன் இணைக்கப்பட்டிருக்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவரும் பொருட்களையும் சேவைகளையும் நுகரத் தொடங்கினால் இந்த நிலை மாறும். நாம் இழந்த நம்பிக்கையும் வளமும் மீண்டும் கிடைக்கும். இதற்காக ‘#Let’sGetIndiaTicking என்கிற இயக்கத்தை முன்னெடுத்துள்ளது டைட்டன் நிறுவனம்.

இதை விளக்கும் விதமாக ஒரு காணொலி வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலியில் எங்கோ யாரோ ஒருவர் ஒரு கடையில் ஒரு பொருளை வாங்குவதன் மூலம் ஒரு டீ கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர் முதல் விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள் வரை தங்களது வியாபாரத்தைத் தொடங்குவது காண்பிக்கப்படுகிறது. இதன்மூலம் நம் பொருளாதாரத்தை மீட்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது நாம் பழையபடி நுகர்வைத் தொடங்கினால் அதன் மூலம் நம் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் நாமும் வளம்பெறலாம் என்கிற செய்தியை ஒரு நிமிடம் ஐந்து நொடிகள் ஓடும் இந்த வீடியோ உணர்த்துகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய டைட்டன் கைக்கடிகாரங்கள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ), சுபர்ணா மித்ரா, “கோவிட்-19 வருவதற்கு முன் மக்களிடம் இருந்த நுகர்வுப் பழக்கம் மீட்டெட்டுக்கப்பட வேண்டும். இதைச் செய்வது மிகப் பெரிய சவால்தான். அதற்கு நமது ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன. அதே நேரம் புதுமையான சிந்தனைகளும் மக்களை மீண்டும் நுகர்வை நோக்கி நகர்த்தத் தேவைப்படுகின்றன. நாங்கள் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவும் எங்களின் மற்ற தனிப்பட்ட முயற்சிகளும், மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பழையபடி பொருட்களையும் சேவைகளையும் வாங்கிப் பயன்படுத்த ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார்.

‘#Let’sGetIndiaTicking இயக்கத்தில். 8,000 டைட்டன் நிறுவன ஊழியர்களும் 40 கூட்டாளி நிறுவனத்தினரும் பங்கேற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். www.letsgetindiaticking.com என்கிற இணையதளத்தின் மூலமாகவோ letsgetindiaticking@titan.co.inஎன்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ நிறுவனங்கள், தனிநபர்கள் டைட்டனுடன் கைகோக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x