அரசு திட்டப் பணிகள் குறித்து தெரிவிப்பதில்லை: ஆய்வுக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்,  அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார், ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Updated on
1 min read

‘அரசு திட்டப் பணிகள் குறித்து எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பதில்லை’ என, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர்.

திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் (DISHA),நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குழுத் தலைவரும், திருவள்ளூர் எம்.பி.யுமான ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ் வளர்ச்சி மற்றும்தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஆட்சியர் மகேஸ்வரி, திருவள்ளூர், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள், ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுதிட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்ட பிறகு, திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், சுதர்சனம் ஆகியோர் பேசும்போது, ‘‘தொகுதிகளில்நடைபெறும் அரசு திட்டங்கள்குறித்து, சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கே மாவட்ட நிர்வாகம் தெரிவிப்பதில்லை. திருவள்ளூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் என்னென்ன மருத்துவ கருவிகள் வாங்கப்பட்டன என்ற தகவல் கூட தெரிவிக்கவில்லை’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தின் இறுதியில் எம்.பி. ஜெயக்குமார் தெரிவித்ததாவது: இந்தக் குழுவானது, மத்திய-மாநிலஅரசு நிதிகளால் மாவட்டத்துக்குள் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைக்கின்ற மற்றும் கண்காணிக்கின்ற குழுவாகச் செயல்படும். கிடப்பில் உள்ளரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணியில், மாநில அரசு பணிகள்தான் கிடப்பில் உள்ளன. அவற்றைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் ‘ஒரு வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in