

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளில், ரூ.33 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதால், சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் 720 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
சென்னையில் 5 மாதங்களுக்குபிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோர் அதிகளவு வருவார்கள் என்று எதிர்பார்த்து, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், ஒரு சில கடைகளைத் தவிர்த்து பெரும்பாலான கடைகளில் எதிர்பார்த்த அளவு கூட்டம்வரவில்லை. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ரூ.50கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம்.
நீண்ட நாட்களுக்கு பிறகுடாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால், நேற்று முன்தினம் ரூ.33.5 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மட்டுமே விற்பனைஆகியுள்ளது.
சென்னையில் நேற்றும் பெரும்பாலான கடைகளில் கூட்டமின்றி காணப்பட்டது.